குடும்பக் கட்டுப்பாடு என்.எஸ்.டபிள்யு ஆனது, 1988-ஆம் ஆண்டின் தனியுரிமைச் சட்டம் (Privacy Act 1988 (Cth)), 2012-ஆம் ஆண்டின் தனியுரிமை திருத்த (தனியுரிமைப் பாதுகாப்பை மேம்படுத்துதல்) சட்டம் (Privacy Amendment (Enhancing Privacy Protection) Act 2012), ஆஸ்திரேலிய தனியுரிமைக் கோட்பாடுகள் (Australian Privacy Principles) மற்றும் தொடர்புடைய என்.எஸ்.டபிள்யு தனியுரிமைச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் (தனியுரிமைச் சட்டம் என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின்படி உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும், ஒரு பொறுப்பான முறையில் உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கையாள்வதற்கும் உறுதிபூண்டுள்ளது.
ஆகியவற்றின்படி உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும், ஒரு பொறுப்பான முறையில் உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கையாள்வதற்கும் உறுதிபூண்டுள்ளது. தனிப்பட்ட தகவலை FPNSW எவ்வாறு கையாள்கிறது என்பது பற்றிய மேலும் தகவல்களுக்கு, FPNSW தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்
பயன்பாடு மற்றும் வெளிப்படுத்துதல்
‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்பானது, இரகசியமான முறையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. தர மேலாண்மை நோக்கங்களுக்காக சில தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன. ‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்பு வழங்கும் தகவல்களை, குறிப்பிட்ட மருத்துவ ஆலோசனையாகவோ, நோய் கண்டறிதலாகவோ, சிகிச்சையாகவோ அல்லது இரண்டாவது கருத்தாகவோ கருதக்கூடாது. தனிப்பட்ட மருத்துவ ஆலோசனை தேவைப்படும் விடயங்களைக் கேட்கும் நபர்கள், மருத்துவ சேவை வழங்குநர்களிடம் செல்லுமாறு பரிந்துரைக்கப்படுவார்கள்.
வலைத்தளச் சிறுகோப்பு (COOKIE) கொள்கை
pregnancychoices.org.au தளத்தில் உங்கள் செயற்பாட்டை மதிப்பிடுவதற்கு, பெயர் அறியப்படாத, தனிப்பட்டதல்லாத தகவல்களைச் சேகரிக்க ‘பிரகனன்சி சாய்ஸ்’ உதவி இணைப்பு இணையதளமானது வலைத்தளச் சிறுகோப்புகளை (குக்கீகளை) பயன்படுத்தலாம். எங்கள் இணையதள செயற்பாட்டை மேம்படுத்துவதற்கு மட்டுமே இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படும். வலைத்தளச் சிறுகோப்புகள், தனிநபர்களை அடையாளம் காணும் தகவல்களை சேகரிக்காது. ‘பிரகனன்சி சாய்ஸ்’ உதவி இணைப்பு இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், வலைத்தளச் சிறுகோப்புகளைச் சேகரிப்பதற்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.