என்னை மறைக்கவும்

பெற்றோராவதைத் தேர்ந்தெடுத்தல்

ஒரு குழந்தையை வளர்க்கலாமா வேண்டாமா என்பதைத் தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய முடிவாகும். நீங்கள் உங்களது வாழ்க்கைத்துணையுடனோ அல்லது தனியாகவோ பெற்றோராக இருப்பதைத் தேர்வு செய்யலாம். நீங்கள் ஒருவருடன் உறவு ஒன்றில் இருக்கும் போது கர்ப்பமாகியிருந்தால், உங்கள் தெரிவு குறித்த கலந்துரையாடலில் உங்கள் துணைவரை நீங்கள் ஈடுபடுத்தலாம்.

வாழ்க்கைத்துணையுடன் பெற்றோராக இருத்தல்

ஒரு குழந்தையை வளர்ப்பதால் உங்கள் உறவு, வருமானம் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதைப் பற்றி உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசுவது முக்கியமாகும். பல்வேறுபட்ட உணர்ச்சிகளை உணர்வதும், நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதும் இயல்பானதாகும். நீங்கள் தம்பதியினராக சேர்ந்து முடிவுகளை எடுக்கவில்லை என்றால், அல்லது உங்கள் உறவு புதியதாகவோ அல்லது நிலைப்பாடில்லாததாகவோ இருந்தால், முடிவொன்றை எடுக்கும் பயணமானது கடினமானதாகவோ, உணர்ச்சியில் ஆழ்த்தக்கூடியதாகவோ இருக்கலாம்.

தனியாக ஒரு பெற்றவராக இருத்தல்

சிலர், தனிப் பெற்றவராக இருப்பதைத் தேர்வு செய்யலாம், மற்றவர்களோ உறவு முறிவடைதல் அல்லது எவ்வாறு திட்டமிடப்படாமல் உருவான கர்ப்பத்தைத் தொடர்வது என்ற முரண்பாடுகளினால் தனிப் பெற்றவராக இருப்பதைத் தாங்களே தேர்ந்தெடுக்கக்கூடும். உங்கள் குடும்பத்தாரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுவதும், உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆதரவு வலையமைப்புகளைப் பற்றி சிந்திப்பதும் நல்லது.

பெற்றோராக இருப்பதற்கான ஆதரவு

நிதி மற்றும் நடைமுறை உதவி ஆகியவை உள்ளிட்ட, ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு உதவும் வகையிலான ஆதரவு கிடைக்கிறது. சாத்தியமான நிதி உதவி விருப்பங்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் உங்களுக்கு வேண்டுமென்றால், பின்வருவதைப் பார்வையிடவும்: குழந்தைகளைப் பெறுதல் | என்.எஸ்.டபிள்யு (NSW) அரசு

கர்ப்ப பராமரிப்பு பற்றிய மேலும் தகவல்களுக்காக இனப்பெருக்க மற்றும் பாலியல் சுகாதார செவிலியர் ஒருவரிடம் பேச 1800 008 463 என்ற எண்ணில் ‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்பை அழைக்கவும். செவிலியரிடம் பேசுவது இரகசியமானதும் அநாமதேயமானதும் ஆகும். நீங்கள், உங்கள் பொது மருத்துவரையும் (GP), அல்லது மகப்பேற்று செவிலியர் ஒருவருடன் அல்லது சமூகப் பணியாளர் ஒருவருடன் பேசுவதற்கு உள்ளூர் மருத்துவமனையின் மகப்பேற்றுப் பிரிவையும்கூட தொடர்புகொள்ளலாம்.